இராமநாதபுரம்

கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை மற்றும் கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளையின் நிறுவனர் முகமது அலி ஜின்னா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி ஆர்ச், பெரிய கடைவீதி வழியாக சென்று ஓட்டப்பாலத்தில் நிறைவு பெற்றது. வழி நெடுகிலும் கண்தானம் மற்றும் சர்க்கரை நோயை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தியபடி வந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button