இராமநாதபுரம்

கீழக்கரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா: தொழிலதிபர் சதக் இலியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது

கீழக்கரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா: தொழிலதிபர் சதக் இலியாஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் முத்தமிழ் அறிஞர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த தொழிலதிபரும், திமுக முக்கிய பிரமுகருமான சதக் இலியாஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில், உசேன், தம்பி வாப்பா முக்தார், ஆதம், சபீர், மஜித் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழாவின் ஒரு பகுதியாக கலைஞரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகள், கலைஞரின் தமிழுக்கும், சமூகநீதிக்கும் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து பேசினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button