கீழக்கரை பொதுநல சங்கம் சார்பில் கோரிக்கை மனு

கீழக்கரை பொதுநல சங்கம் சார்பில் கோரிக்கை மனு

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை
புதுக்கிழக்கு தெரு பொதுநல சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர் மனுவில் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பட்டாணியப்பா சாலை மிகவும் சிதிலமடைந்து, மழை காலத்தில் மழை நீர் தேங்கிய நிலையில் இருப்பதாலும், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவும் மேலும், பாதாள சாக்கடையிலிருந்து கழிவு நீர் வெளியேறி நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது எனக் கூறியும் இந்த பிரச்சினையை உடனடியாக சரி செய்து தருமாறும் நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா அவர்களிடம் மனு அளித்தனர் இந்நிகழ்வில் புதுக்கிழக்கு தெரு பொதுநல சங்கத்தின் தலைவர் சீனி, செயலாளர் ஹமீது, பொருளாளர் முஹம்மது ஃபரூஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும், கவுன்சிலர்கள் நவாஸ், சேக் ஹுசைன், சித்திக், சூரியகலா, ஃபைரோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.




