இராமநாதபுரம்
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 3 சென்ட் இடத்திற்கு இலவச நிலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேந்தோணி விஏஓ செல்வகுமாரை புகார்தாரர் 8 நாள்களுக்கு முன் அணுகினார். பட்டா வழங்க விஏஓ ரூ.5000 லஞ்சம் கேட்டார். இது தொடர்பாக ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசாரின் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய பணத்தை செல்வகுமார் வாங்கியபோது சிக்கினார்.




