சென்னை :’ஹைக்கூ முற்றம்’ அமைப்பு தொடக்கம் மற்றும் ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா

‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பு தொடக்கம் மற்றும்

ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற்றது
சென்னை. ஜூன்.10
’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் தொடக்க விழா மற்றும்
ஹைக்கூ நூல் வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணா நகரிலுள்ள
நான் ஓர் ஐஏஎஸ் அகாடமி அரங்கில் கடந்த ஜூன் 7 அன்று காலை
நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஓவியக்கவிஞர் அமுதபாரதி தலைமையேற்றார்.
’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் நோக்கம் குறித்தும், விழாவிற்கு
வருகை தந்த அனைவரையும் வரவேற்றும் கவிஞர் மு.முருகேஷ்
உரையாற்றினார்.
’ஹைக்கூ முற்றம்’ அமைப்பின் இலட்சினையை அறிமுகம் செய்ததோடு,
கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் எழுதிய ‘கருவானிலொரு சிறு
கீறல்’ ஹைக்கூ நூலினை வெளியிட்டும் காவல் கண்காணிப்பாளரும்
கவிஞருமான மணி சண்முகம், ஐபிஎஸ் உரையாற்றினார்.
ஹைக்கூ நூலினைப் பெற்றுக்கொண்ட கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன்
வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியரும் கவிஞருமான தமிழ் இயலன், ஹைக்கூ
நூல் குறித்த திறனாய்வுரையை வழங்கினார்.
ஹைக்கூ வாசிப்பரங்கில் கவிஞர்கள் கருமலைப்பழம் நீ, குமரி அமுதன், ப்ரியா
ஜெயகாந்த், சாந்தி சரவணன், ஜி.சோமசுந்தரி, வசந்தா சுவாமிநாதன், சீ.பாஸ்கர்,
நன்மாறன், முனைவர் பாஸ்கரன், தென்னவன், கு.அசோகன், மகிழை.சிவகார்த்தி,
வ.ரகுநாத் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஹைக்கூ கவிதைகளை
வாசித்தனர். சிறப்பான கவிதைகளை வாசித்த கவிஞர்களுக்குப் புத்தகப் பரிசுகள்
வழங்கப்பட்டன.
விழாவில், திரைப்படப் பாடலாசிரியர் சங்கத்தின் தலைவர் கவிஞர் தமிழமுதன்,
டாக்டர் எழிலரசி, எழுத்தாளர் சந்துரு மாணிக்கவாசகம் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
இவ்விழாவில், இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாலையில்
நடைபெறவுள்ள ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வுகளில், ஹைக்கூ கவிதை வாசிப்பு,
ஹைக்கூ நூல் அறிமுகம், ஹைக்கூ பகிர்வு, ஹைக்கூ பயிற்சி ஆகிய நிகழ்வுகளை
நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கவிக்கோ
அப்துல் ரகுமானின் நினைவு நாளையொட்டி ஹைக்கூ கவிதைப்போட்டியை
நடத்தும் திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமிக்குப் பாராட்டும்
தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வின் நிறைவாக, ‘ஹைக்கூ முற்றம்’ அமைப்பாளர் கவிஞர் ப.சொக்கலிங்கம்
நன்றி கூற, நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
படம் :
கவிஞர் ப.சொக்கலிங்கம் எழுதிய ‘கருவானிலொரு சிறு கீறல்’ ஹைக்கூ நூலினைக்
காவல் கண்காணிப்பாளரும் கவிஞருமான மணி சண்முகம் வெளியிட, கவிஞர்
ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். அருகில், கவிஞர் மு.முருகேஷ்,
நூலாசிரியர் கவிஞர் ப.சொக்கலிங்கம், ஓவியக்கவிஞர் அமுதபாரதி, பேராசிரியர்
தமிழ் இயலன் ஆகியோர் உடன் உள்ளனர்.




