இராமநாதபுரம்

ரேஷன் அட்டைகளில் அறிவிப்பின்றி பெயர் நீக்கம் செய்வது கூடாது : தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !!

ரேஷன் அட்டைகளில் அறிவிப்பின்றி பெயர் நீக்கம் செய்வது கூடாது பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் மூலமாக தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என் எஸ் பெருமாள் ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் என் கே ராஜன் பரமக்குடி நகர் செயலாளர் கே ஆர் சுப்ரமணியன் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர் எஸ் சுப்பிரமணியன் டி ஆர் பாஸ்கரன் ஆகியோர் நேரில் சென்று வட்ட வழங்கல் அலுவலகத்தில் இந்த கோரிக்கை மகஜர் வழங்கப்பட்டது

👇

அனுப்புனர்:
என் எஸ் பெருமாள்
மாவட்டச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பரமக்குடி

பெறுநர்:

வட்ட வழங்கல் அலுவலர் வட்டாட்சியர் அலுவலகம் பரமக்குடி.

வழியாக .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை.

பொருள்:

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பெயர் நீக்குதல் தொடர்பாக…

ஐயா வணக்கம்

கடந்த சில மாதங்களாக பல குடும்ப அட்டைகளில் இருக்கின்ற பெயர்களை எவ்வித அறிவிப்புமின்றி நீக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

குடும்பத்தில் உள்ளவர் வருடத்திற்கு ஒரு முறையாவது ரேஷன் கடைக்கு வரவேண்டும் என்கிற விதிகள் தவறானதாகும்.

ஆதார் அட்டையில் உள்ள பெயர்களை வைத்துத்தான் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் எந்த ஒரு நபரும் இரண்டு ரேஷன் கார்டில் இடம் பெறுவது இயலாத காரியமாகும். மேலும் குடும்ப கார்டில் உள்ள பெயர்களை எவ்வித அறிவிப்புமின்றி நீக்குவது நீக்கிய பின்னர் உடனடியாக வழங்கப்பட்டு வந்த அரிசி சர்க்கரை அளவை குறைப்பது போன்ற செயல்கள் தமிழ்நாடு அரசின் மக்கள் நல தட்டங்களுக்கு
எதிரானதாகும்.

இந்தியாவிலேயே முதன் முதலில் நுகர்பொருள் வாணிபக் கழகம் என அனைத்து ரேஷன் கடைகளின் மூலம் நியாயமான விலையில் பொருட்கள் வழங்குவதால் நியாய விலை கடை என்று அரசாங்கத்தால் அழைக்கப்பட்டது.

தற்போது பெயர் நீக்கம் போன்ற செயல்களால் ரேஷன் கடை சாமானிய மக்களின் கைக்கெட்டாத தூரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

எனவே
மேலும் இது போன்ற செயல்களால் தமிழ்நாடு அரசின் செயலுக்கு விரோதமாக அமைகிறது தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களுக்கு விரோதமாக அமைகிறது. எனவே அறிவிப்பு ஏதும் வழங்காமல் பெயர் நீக்குதல் முறையினை கைவிட வேண்டும்.

தற்போது ஜீவா நகரில் உள்ள ரம்கோ கடை எண் 5 ல்1800 குடும்ப அட்டைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது 500 கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்கிற வகையில் அரசு திட்டமிடுகிறது .ஆனால் காலம் காலமாக இந்த ராம்கோ கடை மட்டும் பிரிக்கப்படாமல் அப்படியே இயங்கி வருவது பல முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது.

இந்த ரேஷன் கடையில் மற்றும் 30 நாட்களும் கூட்டமாகவே நின்று வாங்குகிற ஒரு ஒரு அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

இந்த அவலத்தை நீக்கும் வகையில் உடனடியாக ராம்கோ கடை எண் 5 இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐ டியூசி தொழிற்சங்கமும் கேட்டுக் கொள்கிறது. இதனை தங்களின் வாயிலாக முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
என் எஸ் பெருமாள்
மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button