1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

உலக மகளிர் நாள் -2021

உயிர் கொடுத்து முளைக்க வைத்து உணர்வுகளாலேயே  சிரிக்க வைக்கும்… தாய்   உடன் பிறப்பெடுத்துச் செல்ல சிலம்பெடுத்து நீள் பயணத்தில் உற்ற துணையாகும் உதிரமது… சகோதரி   இல்லத்திலும் இல்லறத்திலும் சேவைக்கு உருகொடுத்து தேவைகள் தீர்க்கும் ஓருயிர் ராணுவப்படை…மனைவி   ஒரு வார்த்தை கவிதையாம் உயிர் பெற்ற கடவுளாம்…

சிங்கப்பெண்ணே வெளியே வா

சிங்கப்பெண்ணே வெளியே வா ஜன்னல் வழியாய் விண்மீன் பார்த்தது போதும் கதவு திறந்தால் காணக் கோடியுண்டு சிங்கப்பெண்ணே வெளியே வா…… வாசல் பெருக்கி கோலம் போட்டு வீடு துடைத்து தூபம் போட்டு பலப்பல பண்டங்கள் படைத்துத் தந்து உடுப்பு துவைத்து உலர்த்தி மடித்து அலுவல் செல்லும் அகம்படையார்க்குக் களைப்பு நீக்கக்…

அவள்தான் நமது உலகம்

அவள்தான் நமது உலகம் அவள்தான் நமது உலகம் அவளோ தன் தாய்வீட்டின் கதவு தட்டும் ஓசையைக்கூட பல்லிச் சத்தத்தில்தான் உணர்கிறாள் அவள் வாழ்ந்த வீட்டுக்கும் வாழ்க்கைப்பட்ட வீட்டுக்கும் இடையில் மழை…வெயில்…காற்று வானம்…பூமி…பறவை… கனவுகள்…தோழிகள்… குல தெய்வமும்கூட மாறித்தான் போய்விட்டன அவளது ஒரு கண்ணில் சூரியன் ஒரு கண்ணில் நிலவு…

சோளத்தட்டை நாயகர்கள்

சோளத்தட்டை நாயகர்கள் _________________________________________ ருத்ரா தொந்தரவு செய்யவேண்டுமென்றால் ஒரு சக்கரநாற்காலியில் தான் உட்காரவேண்டுமா? பகல் வேஷங்களின் அரிதாரங்கள் கையில் இருக்கும் போது நாயாகவோ நரியாகவோ இல்லை முடைநாற்றம் வீசும் கழுதைப்புலியாகவோ இருந்து இந்த மக்களைத் துவைத்துக்காயப்போடலாமே. யாவாராயினும் நா காக்க.. சொன்னது யாரு….? ஓ அந்த ருத்திராட்சக்கொட்டை அணிந்த…

போலி மனிதர்

உண்மையாக நேசித்தேன் ஏமாற்றப்பட்டேன் நேர்மையாக இருந்தேன் எல்லாவற்றையும் இழந்தேன் கண்ணியத்தோடு பழகினேன் காயப்படுத்தபட்டேன் நியாயம் பேசினேன் அவமதிக்கப்பட்டேன் கேள்வி கேட்டேன் நிராகரிக்கப்பட்டேன் உதவி செய்தேன் பழியை ஏற்றுக் கொண்டேன் தவறுகளை எதிர்த்தேன் விமர்சிக்கப்பட்டேன் வார்த்தைகளை நம்பினேன் மனசு உடைந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போலி மனிதர்களிடம் இருந்து நான்…

உலக தாய் மொழி தினம்

உலக தாய் மொழி தினம் பெற்ற தாய் நமக்கு போதித்த மொழியே நமது தாய் மொழியாம் – ஆயின் தந்தை வழியே வருமொழியே -பேச்சு வழக்கில் நமது தாய் மொழியாம். தாயென ஒருவர்தான் நமக்கு – ஆகையால் தாய் மொழியும் ஒன்றே  நமக்கு . தாய் மொழியில்தான் பேசிக்கணும் தாய் மொழியை நாம் நேசிக்கணும். தாய் மொழியில்தான் யோசிக்கணும். தாய் மொழியை நாம் ஸ்வாசிக்கணும் தாய்…

வாழ்க்கை

வாழ்க்கையில் சாதிக்கவே கற்றுக் கொள்ளுங்கள்..! வாழ்வில் உயர்வதையே இலட்சியமாய் மாற்றுங்கள்..! வாழ்க்கையை இயல்புநிலைக்கு இயல்பாய் இயங்கவிடுங்கள்..! வாழ்க்கையில் வரும் சவால்களை சமாளித்துக் கொள்ளப் பழகுங்கள்..! வாழ்க்கையின் சாராம்சமே அன்பும் அரவனைப்பும் காட்டுவதே..! வாழ்க்கையில் இன்முக விருப்பத்துடன் மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்..! வாழ்க்கையை துணிவோடும் மனமகிழ்வோடும் பயணிக்க பழகவும்..! இவையே…

பச்சோந்தி

சூழலுக்கேற்ப மாறும் பச்சோந்திகள்..! படித்ததுண்டு பள்ளிக் கூடங்களில். தன்னைப் பாதுகாக்க தான் மாறுகின்றன.. அறிவியல் ஆசிரியர் அளித்தார் விளக்கம்; மேற்கோள் காட்டினார் டாவின்சி கோட்பாட்டை அறிவியல் கற்றுக் கொடுத்தது ஐந்தறிவுகளின் மாறலை அனுபவங்கள் கற்றத் தருகின்றது ஆறறிவுகளின் வேடமிடல்களை…! பிறப்பு முதல் இந்நாள் வரை காதல் முதல் நட்பு…

காதலர் தினம்

காதலர் தினம் ———————— காத்திருங்கள் பிள்ளைகளே, காதலிக்கலாம் பின்னால். புது உறவைத்தேடி, சதிவலையில் சிக்கும், பதின்பருவ பிள்ளைகளே, கேள்விகளால் புரிவோம், காதலர் தினத்தை. இனம்புரியா உணர்வுகளால் இளம்வயதில் வருவதா காதல்? நான் யார்? நீ யார்? – தெரியாமலேயே வருவதா காதல்? எல்லாம் தெரிந்த பெற்றோருக்கு, நான் எதிரி…

காதல்!

இது காதலர் தினத்திற்காக இல்லை, காதலுக்காக! ********** — கவிஞர் அத்தாவுல்லாஹ் — சூரிய சந்திரனோடு பூமியைச் சுற்றும் நவகிரகங்கள் இன்னொரு கிரகமாய் காதல்! சிலருக்குக் கனி சிலருக்குச் சனி! ஆதாம் கடித்த அந்த கனியின் மிச்சம் இன்னும் கொஞ்சம் சொச்சம் இருப்பதால்தான் காதலின் எச்சம் இருந்து கொண்டிருக்கிறது!…