உலக தாய் மொழி தினம்

Vinkmag ad

உலக தாய் மொழி தினம்

பெற்ற தாய் நமக்கு போதித்த
மொழியே நமது தாய் மொழியாம் – ஆயின்
தந்தை வழியே வருமொழியே -பேச்சு
வழக்கில் நமது தாய் மொழியாம்.
தாயென ஒருவர்தான் நமக்கு – ஆகையால்
தாய் மொழியும் ஒன்றே  நமக்கு .
தாய் மொழியில்தான் பேசிக்கணும்
தாய் மொழியை நாம் நேசிக்கணும்.
தாய் மொழியில்தான் யோசிக்கணும்.
தாய் மொழியை நாம் ஸ்வாசிக்கணும்
தாய் மொழியில்தான் பேசிக்கணும்
தாய்மொழிமீது பற்றுவைப்போம்.
தாய் நாட்டின்மீதும் பற்றுவைப்போம். -பெற்ற
தாயின் மீதும் பற்று வைப்போம் – அதுவே
தாயெனும் சொல்லுக்கு  மரியாதை .
வேற்றுமொழி பல கற்றாலும்
வேரென்பது நம் தாய் மொழியே -அறி
வாற்றலை வளர்ப்பது தாயமொழியே
போற்றுவோம் அதனை எந்நாளும் .
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
21.02. 2021 .

News

Read Previous

வேகம் தேவைதான், அவசரம் அல்ல…!

Read Next

இரக்கம் கொள்ளுங்கள்…!

Leave a Reply

Your email address will not be published.