முதுமை நட்பு

Vinkmag ad

முதுமை நட்பு
“”””””””'”””””””””'”””
இளமையில் நட்பு
இதயத்தில் பூக்கும்
துள்ளி ஓடும்
புள்ளி மானாய்
தோகை விரித்தாடும்
வண்ண மயிலாய்
வானின் நட்சத்திரமாய்
தோன்றும் நட்பு
வாழ்நாள் துணையாகும்
இன்னலுறும் வேலை
இடர் வரும் காலை
உடனிருந்து காக்கும்
உயர் பண்பாகும்
உற்றார் உறவினர்
உடன் பிறந்தார்
உதறி தள்ளினாலும்
உயிரையே கொடுக்கும்
உண்மை நட்பு
மனைவிடமும் பிள்ளைகளிடமும்
மனவிட்டு பேசமுடியாததை
மனபாரத்தை தாங்கும்
சுமைதாங்கி நட்பு
முதுமையில் நட்பு
மன அழுத்தத்தை
போக்கும் நட்பு
உடல் நலிவுற்ற
நிலையில் உடன்
இருந்து பாசம்
காட்டும் நட்பு
பிள்ளைகள் மணம்
முடித்து மனைவி
மக்களுடன் இருக்கையில்
தனிமையின் சூழலில்
துணையிருப்பது நட்பு
இளமை நட்புடன்
முதுமை நட்பே
நம்பிக்கை தரும்
உயரிய நட்பு

தஞ்சை.ந.இராமதாசு

News

Read Previous

ஆயிரம் பிரச்சனை — எஸ் வி வேணுகோபாலன்

Read Next

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?….

Leave a Reply

Your email address will not be published.