1. Home
  2. கவிதைகள் (All)

Category: கவிதைகள் (All)

மெளனங்கள்

முட்டைகளை ஒத்திருக்கின்றன மெளனங்கள். வெண்மையாலான ஓடு வெளித்தெரியும் சமாதானமாகவோ… சம்மதமாகவோ…! உள்ளிருப்பு தெரிவதில்லை உடையும் வரை! பொறுமை காத்து பிரசவிக்கச் செய்யலாம் புதிய பிறப்பை! எனினும்.. உடைக்கப்பட்டே உட்கொள்ளப்படுகின்றன பெரும்பாலும்! இன்னமும் உடைக்கப்பட முடியாமலிருக்கும் ஒற்றை முட்டையில் உறைந்திருக்கலாம் ஓர் மகா நிசப்தம். (உயிரோசை மின்னிதழில் வெளியாகியிருக்கிறது). —…

நட்பு

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் வானத்தை தீண்டும் மேகமில்லை நட்பு என்றும் ஒரிடம் இருக்கும் நட்சத்திரம் நட்பு; என் உடலில் ஒரு உலகம் உண்டு ஆனால் அதை இன்றுவரை நான் பார்த்தது இல்லை; அது ஒரு கனம் துடிக்க மறந்து விட்டால் நான் ஒரு பிணம் அதுபோல நட்பு…

முஸல்லாவே !

முஸல்லாவே ! முழுமனதாய் நானுன்னை மோகிக்கிறேன். யார் சொன்னது நீ வெறும் தொழுகை விரிப்பென்று? நீ சுவனத்திற்கு சுருக்குவழி காட்டும் ரத்தினக் கம்பளம் ! நன்மாராயம் ஈட்டித்தரும் அட்சயப் பாத்திரம் ! உன்னை விரிக்கையில் சொர்க்கத்தின் தூரம் சுருங்கி விடுகிறது ! பூக்கள் .. இதழ்களை விரிக்கையில் பூரிக்கிறது…

வாங்காதீர் வரதட்சணை!

கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களில் சில அறிவீனர்கள்! ஆத்திரமடையாதீர் தோழர்களே! அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! பெண்ணைப் பேதையென நினைப்பது…

இனிவரும் நாள்கள்

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக.. ….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக! இனவாதம் மதவாதம் இறந்து போக ….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க.. பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை ….பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க.. நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன் ….நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்! கடந்துவந்த காலத்தை எண்ணிப்…

மறதி

நினைத்து நினைத்து நிம்மதி இழக்கவைக்கும் நினைவுகள்… மறதி இல்லையெனில் மனிதனிடம் வாழ்க்கையில்லை மறப்பதால் மனம் மலர்கிறது வாழ்வு சுவைக்கிறது… கொட்டிய வார்த்தைகளும் கொடுத்த பொருள்களும் அவ்வபோது மறந்துவிடுவதினால் ஊறுக்கு ஓரு மயானம் இல்லையெனில் உலகமே மயானம்… நிகழ்வை மறந்துப்போனவர்களை அதை நினைவுப்படுத்தி அதில் நிம்மதி காணும் நிகாதனர்கள்… மறக்கவேண்டியதை…

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

ஆலயத்தைக் காப்பாற்ற ஆனைப் படைமீது கற்களை வீசிட அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்த அல்லாஹ்வே..! பாலஸ்தீனத்தின் பாலகர்களும் அக்ஸா ஆலயத்தைக் காப்பாற்ற தானே இனவெறியன் இஸ்ரேலர் மீது மன உறுதியுடன் கற்களை வீசியும்; பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில் தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே………..! இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை???????????? தீர்ப்பு…

பொங்கல் வாழ்த்து

சோற்றிலே நாம் கை வைத்திட- சேற்றிலே கால் வைத்து; ஏற்றமுடன் ஏர் பிடித்து; ஆற்றலுடன் தான் உழைத்திடும் போற்றுதலுக்குரிய உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இல்லத்தில் செல்வம் பொங்க இனிவரும் காலமெல்லாம் இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க சக்கரைப் பொங்கலாய் எக்கணமும் இன்பமே பொங்கட்டும்………………..!!!!!!!!!!!! கவிதைப் பொங்கல்…

உண்மையின் உளறல்

என்னோடு படித்தவள் எனதருமை தோழிகூட ஆண்டிரண்டு செல்லவில்லை மீண்டும் சந்தித்தேன் மீளொனாத் துயரத்தில் ….. அவள் அழகு முகம் மலரவில்லை அவள் அன்பு மனம் குளிரவில்லை அவளில் மங்கலமும் பொங்கவில்லை அவள் மங்கையெனும் நிலையிலில்லை ஈரேழு மாதங்களாம் அவளுக்கு மணமாகி மணவாளனுக்கு மஞ்சல்காமாலையாம் மணவாளன் மாண்டுபோக இவள் மங்கையெனும்…