மறதி

Vinkmag ad

நினைத்து நினைத்து
நிம்மதி இழக்கவைக்கும்
நினைவுகள்…

மறதி இல்லையெனில்
மனிதனிடம்
வாழ்க்கையில்லை
மறப்பதால்
மனம் மலர்கிறது
வாழ்வு சுவைக்கிறது…

கொட்டிய வார்த்தைகளும்
கொடுத்த பொருள்களும்
அவ்வபோது மறந்துவிடுவதினால்
ஊறுக்கு ஓரு மயானம்
இல்லையெனில்
உலகமே மயானம்…

நிகழ்வை மறந்துப்போனவர்களை
அதை நினைவுப்படுத்தி
அதில் நிம்மதி காணும்
நிகாதனர்கள்…

மறக்கவேண்டியதை
நினைப்பதும்
நினைவுபடுத்த வேண்டியதை
மறப்பதும்
மனித குணமல்ல

அன்பை மறப்பவன்
அனாதை
பண்பை மறப்பவன்
பாதகன்
பாசத்தை மறப்பவன்
பாவி
நீதியை மறப்பவன்
நீசன்
தன்னை மறப்பவன்
தாசன்…

நீக்கமற கலந்தவனை
நித்தமும் மறப்பதினால்
நீ நானெனும் வேற்றுமை
பிறக்கிறது அதில்
ஒற்றுமை மறக்கிறது…!

http://kiliyanur-ismath.blogspot.com/2009/01/blog-post_19.html
kiliyanurismath@gmail.com

admin

Read Previous

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

Read Next

இனிவரும் நாள்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *