பச்சோந்தி

Vinkmag ad

சூழலுக்கேற்ப மாறும்
பச்சோந்திகள்..!
படித்ததுண்டு
பள்ளிக் கூடங்களில்.

தன்னைப் பாதுகாக்க
தான் மாறுகின்றன..
அறிவியல் ஆசிரியர்
அளித்தார் விளக்கம்;

மேற்கோள் காட்டினார்
டாவின்சி கோட்பாட்டை

அறிவியல்
கற்றுக் கொடுத்தது
ஐந்தறிவுகளின் மாறலை

அனுபவங்கள்
கற்றத் தருகின்றது
ஆறறிவுகளின்
வேடமிடல்களை…!

பிறப்பு முதல்
இந்நாள் வரை

காதல் முதல்
நட்பு வரை

காலை முதல்
மாலை வரை

சலித்துவிட்டன
மனிதர்களின்
நிறம் மாறல்களைப்
பார்த்து….!

புகழ்ந்த வாய்கள்
இகழ்கின்றன

சிரித்த முகங்கள்
முறைக்கின்றன

அணைத்த கைகள்
நேரம் பார்க்கின்றன
அடிப்பதற்கு

நட்புகள் கூட
மறைகின்றன
சூழலிலிருந்து
தப்புவதற்கு

ஐந்தறிவு
மாறலுக்குக்குக் கூட
இயற்கை சூழல்

எதிரியிடமிருந்து
பாதுகாப்பு
உணவுச் சங்கிலி – என
காரணங்கள் பலவுண்டு

நிறம் மாறும் மனிதர்களுக்கு….?

பணமா?

கவர்ச்சிகளா?

உயர்ந்ததை தேடுகின்ற
இயல்பா?

காமமா?

காரிய சித்திகளா?

இல்லை
காரணமில்லா கர்மங்களா?

கேள்வி கேட்க
வாழ்க்கைப் பாடம்
நடத்தும்
ஆசிரியரில்லை.

கோட்பாடெழுத
டாவின்சி இல்லை;

இப்போதெல்லாம்
கேள்விகளுக்குப்
பதில்களும்
கிடைப்பதில்லை.

கிடைத்தாலும் ஏற்பதற்கு
மனதில் சக்தியில்லை…

முகமூடி மனிதர்களிடையே
விடைகளை விட

விடையில்லா வினாக்கள்
மேலெனத் தோன
விளைகின்றேன்

நானும் நிறம் மாற…!
அல்லது
மௌனமாக தடம் மாற…?

🌘🌒🌘🌒🌘🌒🌘🌒
குறுஞ் சிந்தனை.
ஜே.அன்புராஸ்.

News

Read Previous

முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி

Read Next

நகைச்சுவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *