நகைச்சுவை

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க குணம் அழகாய் உயர்ந்தேற்றும்… இதுவே நகை சுவை யாளர் சேவையாகும்! உலக நகை சுவை யாளர் சங்கமாகும்! விண்ணிலே நகை சுவையால் வெடிக்கும் சிரிப்பிலே, கண்ணிலே நீர் பெருகி கருணை சுரக்குமே, மண்ணிலே வாழுவோர்க்கு நகைப்பின் மூலமே. பொன்னைப் போல் புடம் போட்டு தரத்தை    உயர்த்துமே, இது மன புண்ணை […]

Read More

முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு, அக்கரை தொட்டு, இக்கரை வந்து சக்கரை பேச்சால், எக்கரை வென்று,-அபு பக்கரை சார்ந்த சான்றோர்! கூடியே ஒற்றுமையால், கோடி பலன் கண்டவர்கள், நாடியே கல்வியினை, ஓடியே பயின்றவர்கள் […]

Read More

பர்தாப் போடுதல் சரிதான்!

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்  மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள் …மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப் பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப் …பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!          கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக் …காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால் பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள் …பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச […]

Read More

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013

வாழ்க்கைப் பயணத்தில் அங்கீகாரம் அவசியம் எனில் மதிப்பும் மேன்மையும் உண்டாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   மனிதவாழ்வு மலர இலட்சியம் சாட்சி எனில் ஆசைகளும் கனவுகளும் நனவாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   சமுதாய நலனில் கடமை கருத்தில் எனில் உண்மையும் உழைப்பும் உயர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   கலைகளின் சங்கமத்தில் காட்சிகள் கண்ணில் எனில் அறிவும் ஆக்கமும் வளர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   நிலையில்லா வேளையில் பொறுமை வெறுமை எனில் அமைதியும் ஆனந்தமும் […]

Read More

எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

                          எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.! கண்முன் நடந்தாலும் எதையும் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் ஊர் பற்றி எரியும் போது கூடவே நாங்களும் அழுவோம்.! நீதிக்கான எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும் காலக்கெடு உண்டு.! அவை புஸ்வாணமாகிப் போகும் ஊர் அடங்கிய பின்னே! சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள். தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள். […]

Read More

ஜமால் முஹம்மது கல்லூரி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, பல்கலைக்  கழகமாய் மாறும்! ——————————————————— இறைவன் மறைதனில் கூறுகின்றான் ஓதுவீராக, எழுது கோலை கொண்டு, கற்று கொடுத்தான்! மனிதன் அறியாததை அறிந்து கொண்டான்! சீன தேசம் சென்றேனும், சீர் கல்வி பயிலென்றார் அண்ணல் இரசூலுல்லாஹ்! கற்றவரே உயிருடையார், கல்லாதார் இறந்தோரே, என்றார் திருவள்ளுவர்! இன்று கலாம் கண்ட கனவை, அன்றே கண்டவர்கள், ஜமால் முஹம்மது ராவுத்தர், காஜா மியான் ராவுத்தர், கனவினும் மேலாய் வென்றது, ஜமால் முஹம்மது கல்லூரி! கல்வியை விதைத்து, […]

Read More

முதுவை தீனோர்களை வாழ்த்தும் பாடல்

வாழ்க வாழ்கவே வாழ்கவே, முதுவை தீனோர் வளமுடன் எந்நாளும் வாழ்க வாழ்கவே வாழ்கவே நீண்ட ஆயிளும் நிறைந்த திருப்தியும்…, மீண்டும் மீண்டும் நிதம் மகிழ்வுடன் வனப்பும், வேண்டும் ஒற்றுமை கயிற்றெனும் பிணைப்பும், ஆண்டுக்கொருமுறை இணக்கத்தின் இணைப்பும், வல்லவன் அருளால் நல்லவை கூடி        [வாழ்க வாழ்கவே வாழ்கவே] அக்கரையுடனே இக்கறை வந்தே…, சக்கரை பேச்சால் இனிமையும் தழைத்தே, பக்கரை போன்றே அருங்குணம் சிறந்தே.., எக்கரை தோரும் முதுவையின் புகழே.., ஏஹனின் இஸ்லாம் முழுமையும் பேணி,          [வாழ்க […]

Read More

பிறந்த நாள்

சுக பிரசவத்தால், பிறந்தது குழந்தை, பிஞ்சிளம் குரலில், வெடிப்பான நீண்ட, நிறுத்தாத அழுகை, பிறந்ததும் உடனே, குழந்தை அழ வேண்டும், இந்த குழந்தை என்னாமா, அழுகுது பார் என்று உற்சாக கூக்குரல்கள், அழுகையின், சத்தம் கூட கூட, உறவினர்களின், சந்தோஷமும் கூடியது, மகிழ்ச்சியால், கேலி, கிண்டல்கள், சிரிப்பொலிகள் கருவறையில், நானிருந்த போது நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்கார கண்ணே.. நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே, இப்படியல்லவா, என் தாய் பாடினாள், அவள் பாடியது, […]

Read More

கடவுளே பதில் சொல்வாய் ! (கவிக்கோ அப்துல் ரகுமான்)

1978ஆம் ஆண்டு காயல் பட்டினத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை யில் நான் கலந்து கொண்ட முதல் கவியரங்கம் .அந்தக் கவியரங்கத்தில் கவிக்கோ அவர்கள் பாடிய அற்புதமான தலைமைக் கவிதை இது .இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவராத இக்கவிதை  தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் -( பி எம் கமால் , கடையநல்லூர் ) கடவுளே பதில்சொல்வாய் ! (கவிக்கோ அப்துல்ரகுமான்) எங்கள் சரித்திரத்தின் இருண்ட !காலமது ஏகத்துவச் சுடர் எண்ணெய் இன்றி இருட்டுப் போரில் இளைத்துக் கொண் !டிருந்தது கிரகண நோயில் கிரணங்கள் […]

Read More

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம்

அமீரகம்.. அன்பின் அகம் பண்பின் சுகம் நட்பிகளில் பேரிடம் நானிலத்தின் ஓரிடம் எண்ணெய்ச் சுரங்கம் என்னை வார்தெடுத்த எழில்மிகு அரங்கம் அதிரைப்பட்டினம் அடியேனின் பாடசாலை அபுதபிப் பட்டணம் அடியேனின் தொழிறசாலை பாலைவனத்தையும் பசுஞ்சோலையாக்கிய வேலையாட்களை வேகமாய் உயர்த்திய வேகம் குறையாததால் மோகம் கொண்டு மொய்க்கின்றோம்! “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அன்று படித்தோம் அதிரைப் பள்ளியில் இன்று உணர்ந்தோம் இத்தேசப் புள்ளியில் ஒன்றே இனம் என்றே மனம் பாசக் கயிற்றால் நேசம் கொண்டு அரவணைக்கும் அரபி அனைவர்க்கும் […]

Read More