இராமநாதபுரம்
குடிநீர் குழாய் உடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பல மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சாலையும் சேதமடையும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையினர் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





