தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோரிக்கை மனு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோரிக்கை மனு

இராமநாதபுரம் to ரெகுநாதபுரம் (வழி சேதுக்கரை) வழித்தடத்தில்
5A பேருந்து இயங்கி கொண்டிருந்தது.
தற்போது பல மாதங்களாக இந்த வழித்தடத்தில் முறையாக இந்த பேருந்தானது இயங்கவில்லை.
ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்கிறது.தண்டரேந்தல், மேலப்புதுக்குடி, வெள்ள பிள்ளையார் கோவில், சேதுக்கரை , கீழப்புதுக்குடி, பிச்சாவலசை, சிலையப்பன்வலசை, காவல்காரன் வலசை, தினைக்குளம், நாடார் குடியிருப்பு, சண்முகவேல் பட்டிணம், காக்கையான் வலசை, கட்டையன் பேரன் வளைவு, மங்கம்மாள் சாலை ஆகிய பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், மற்றும் தினைக்குளம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் இந்த வழித்தடத்தில் பேருந்து சரிவர இயக்கப்படாத்தால் மிகுந்த சிரமத்திற்கும் இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர் இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க தமுமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.




