இராமநாதபுரம்

போலீஸ் அதிகாரி மீது தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் உள்ள பேரையூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரியும் முருகன் (54) நேற்று இரவு சுமார் 10 மணியளவில் உப்பங்குளம் கிராமம் அருகே மர்ம நபர்களால் ஆயுதங்களை கொண்டு துணிகரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
​சாதாரண உடையில் சென்ற எஸ்.ஐ. முருகனை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், அவரது முகத்தில் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த அவர், முதலில் முதுகுளத்தூர் தனியார் மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு, எஸ்.ஐ. முருகனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான கள்ள உறவு விவகாரமே காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button