இராமநாதபுரம்

கமுதி மாற்றுதிறனாளி மாணவி சென்னை ஜ.ஜ.டி.க்கு தேர்வு

கமுதி மாற்றுதிறனாளி மாணவி சென்னை ஜ.ஜ.டி.க்கு தேர்வு

ராமநாதபுரம் :

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலவில்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன்- காளீஸ்வரி தம்பதியரின் மகள் பவித்ரா (17) விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் 40 சதவீதம் உடலியக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆவார்.

இவர் கடலாடியை அடுத்துள்ள ஆப்பனூர் அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உயர்நிலைபள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பின்னர் ராமநாதபுரம் அரசு மாதிரிபள்ளியில் +1 +2 படிப்பை முடித்தார்.

மாதிரிபள்ளியில் வழங்கப்பட்ட ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சிறப்பாக பயின்று தேர்வுஎழுதி சென்னை ஜ.ஜ.டி.யில் 4 ஆண்டு பொறியியல் படிப்புக்கு தேர்வானார்.

இதனையடுத்து மாணவி பவித்ராவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர் கிராமமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மாணவி பவித்ராவின் மேல்படிப்புக்கு மாவட்ட நிர்வாகம் உதவிசெய்து ஊக்கப்படுத்த வேண்டும் என பெற்றோர்கோரிக்கைவிடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button