மாபெரும் இரத்ததான முகாம்

மாபெரும் இரத்ததான முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.) இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தின.
கல்லூரி முதல்வர் மணிமாறன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் நிவேதிதா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற முகாமில், மாணவ, மாணவிகளுக்கு இரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து தன்னார்வத்துடன் 40 மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவர் நிதிஷ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சேர்மன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர்கள் நேதாஜி, கருணாகர சேதுபதி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் நிர்மல்குமார், நாகராஜ், இந்தியன் மெட்ராஸ் சொசைட்டி புரவலர் தேவி உலகராஜ், பொருளாளர் குணசேகரன், பசுமை ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மலைக்கள்ளன், யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் தவசிங்கம், முதுகுளத்தூர் இந்தியன் ரெட் கிராஸ் பொறுப்பாளர் துரைப்பாண்டியன் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மனித உயிர்களைக் காக்கும் உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.




