இராமநாதபுரம்

தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

ஆட்சியர் சிவகுருபிரபாகரன் தகவல்!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுருபிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது
மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.7, நாள்: 11.08.2026ல், ஹஜ் 2027ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப, நிகர்நிலை மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
தற்காலிக பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை சுமார் இரண்டு மாத காலம் ஆகும்.மத்திய/மாநில அரசு ஊழியர்கள், துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள்/அல்லது மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுநிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும்.
இப்பணிக்காக நிகர் நிலை மூலம் விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியனவும் மற்றும் இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியில் (haja.hajcommittee.gov.in) அறிந்து கொள்ளலாம்.கடைசி நாள்: 27.08.2026
இது தொடர்பாக உரிய விவரங்களுக்கு 04567-231050 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுருபிரபாகரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button