இராமநாதபுரம்

பரமக்குடியில் மாவட்ட அளவில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

பரமக்குடியில் மாவட்ட அளவில் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் .

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேளாண்மை துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் வரவேற்றார்.வேளாண்மை துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம் இராஜேந்திரன்
கருத்தரங்கு மற்றும் கண்காட்சி குறித்து சிறப்புரைஆற்றினார்.
மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் சிவகுருபிரபாகரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் .
அப்போது அவர் பேசுகையில், விவசாயிகள் , வேளாண்மையின் முதுகெலும்பு, விவசாயிகள் இந்த கண்காட்சியில் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு வேளாண்மையில் செயல்படுத்தபட்டுள்ள வேளாண் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும். மேலும், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தொழிலுநுட்ப கண்காட்சியினை பார்வையிட்டார்.
இதில் வேளாண்மை முறையில் சாகுபடி செய்வதன் அவசியம் மண்வளம், உயிர்மஉரம், உயிரியல் காரணிகள் மூலம் பயிர் பாதுகாப்பு முறைகள், விவசாய பொருட்களுக்கான, ஏற்றுமதி சந்தைவாய்ப்பு, பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை மதிப்பு கூட்டுதல், நெல் இரகங்கள் மற்றும் சிறுதானிய பொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டது.
ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் வாசுகி ” உயிர்உரங்களின் பயன்பாடு, ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல், மதிப்பு கூட்டிய சிறுதானியங்கள், மற்றும் பாரம்பரிய வேளாண்மை முறைகள் குறித்து பேசினார்.மாவட்ட கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் வேளாண்மைத் துறையில் வைக்கப்பட்ட தொழில்நுட்ப கண்காட்சியில், நெல்-ஜெயராமன் பாரம்பரிய நெல் இரகங்கள், குறுகிய கால நெல் இரகமான அறுபதாம் குறுவை பற்றி விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டு கலந்துரையாடினர்.
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) அமர்லால்” பொட்டாசியம் குளோரைடு விதை நேர்த்தி பற்றி விவசாயிகளிடம் கூறினார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் இராஜா திரவ உயிர் உரங்களின் முக்கியத்துவம் குறித்தும், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன் மண்ணின் முக்கியத்துவம் , நுண்ணீர் பாசனத் திட்டத்தின் வேளாண்மை உதவி இயக்குநர் இராஜலெட்சுமி “நுண்ணீர் பாசன மேலாண்மை குறித்தும்
மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் பயிர் காப்பீடு கீதாஞ்சலி பயிர் காப்பீடு குறித்தும் விவசாயிகளுக்கு கருத்துக்களை தெரிவித்தனர் . இதனை தொடர்ந்து. ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் விஞ்ஞானிகள் முத்துராமு,ஜெகதீசன் மற்றும் விஜயராகவன் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர் . பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் சீதாலட்சுமி நன்றி கூறினார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button