தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்!

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு எதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.21% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம் அறிவிப்பு
இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 29.08.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, இன்று வரை, நியாயவிலைக் கடைகள் மூலம் கைரேகைப் பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வருகின்ற 29.08.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




