கமுதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

கமுதி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போதையில்லாத தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .
ராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஸ்ரீ பகவதி அறக்கட்டளை சார்பில் போதையில்லாத தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிலையத்தின் முதல்வர் கு.இரா.ஹரிகுமார் தலைமை வகித்தார் ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவர் மு.வெள்ளைப்பாண்டியன் கலந்து கொண்டு போதையில்லாத தமிழகம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு தடைசெய்ய வேண்டிய போதை பொருள்கள் , வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் மேம்பாடுகள், இளைஞர்களை நல்வழிபடுத்துதல், தன்னார்வலர்கள் பண்புகள் , வளர்ச்சி அடைந்த இந்தியா , மத்திய மாநில அரசின் திட்டங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.





