இராமநாதபுரத்தில் போலி பவர் பத்திரம் தயாரித்து ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 4 பேர் கைது : ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் சிக்குகிறார்கள்

இராமநாதபுரத்தில் போலி பவர் பத்திரம் தயாரித்து ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 4 பேர் கைது : ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் சிக்குகிறார்கள்

இராமநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர் அலி என்பவரின் மனைவி ஹாஜாபானு. இவருக்கு இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள 80 சென்ட் இடம் உள்ளது
தற்போது அது காலி இடமாகவே இருந்து வந்தது.
போலி பத்திரம்
இதை போலியான பவர் பத்திரம் ஆவணம் மூலமாக சின்னக்கடை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி என்பவரும், அவருடைய கூட்டாளிகளான செந்தில் குமார்,சந்திரகுமார் , ஆகியோரும் 80 சென்ட் நிலத்தில் ஒரு பகுதியை பத்திரம் போட்டு வாங்கிக்கொண்டு மீதமுள்ள பகுதியையும் விற்பனை செய்வதற்காக போலி பத்திரம் தயார் செய்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த நில உரிமையாளர் ஹாஜா பானு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இராமநாதபுரம் நில மோசடி பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜாபர் அலி, சந்திரகுமார், செந்தில் குமார், மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சிக்குகிறார்கள்
ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங் கள் மூலம் அபகரிக்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ரியல் எஸ்டேட் புரோக்கர்களும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் தெரிவித்துள்ளார்




