முதுகுளத்தூர் அருகே நரி தாக்கியதில் பெண் காயம்!

முதுகுளத்தூர் அருகே நரி தாக்கியதில் பெண் காயம்!

பள்ளி அருகே நடந்த சம்பவத்தால் மாணவர்கள் அச்சம் – நரிகளை பிடிக்க கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்காஞ்சிரங்குளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் நரி தாக்கியதில் பெண் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த கிராமத்தை சேர்ந்த காளி தேவன் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் மாலையில் வேப்ப மரத்தின் கீழே வேப்ப முத்து எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது பள்ளி அருகில் உள்ள கருவேல மரத்தின் முட்புதரில் இருந்து பாய்ந்து வந்த நரி, லட்சுமியை திடீரென தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
லட்சுமியின் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து நரியை விரட்டி விட்டு, அவரை மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பள்ளி நேரத்தில் மாணவர்கள் முன் இந்த சம்பவம் நடைபெற்றதால் மாணவர்கள் அச்சமடைந்து கடந்த இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்வதை தவிர்த்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி குழந்தைகளின் கல்வி நலன் கருதி மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் கூண்டு அமைத்து அந்த பகுதியில் சுற்றித்திரியும




