கவிதைகள் (All)

கல்யாண்ஜி கவிதைகள்

கல்யாண்ஜி கவிதைகள் – மூன்று
=== === === === === === === ===
நவம்பர் – 14

இறந்து போன சாச்சாவின்
கோட்டுப் பொத்தானில்
செருகிப் பார்க்க
சாந்தி வனத்தில்
ஆயிரம் ஆயிரம்
ரோஜாப் பதியன்கள்.
சட்டையின்றி ரொட்டிக்குக்
கைநீட்டும் வீதியில்
ஒரு குழந்தை,
எல்லோர்க்கும்
பெய்யும் பனி.
=== === === === ===
சூரியனை
ஆற்றங்கரை மணலை தொட்டாற்சுருங்கிச் செடியை
பாசஞ்சர் ரயிலின்
அற்புத இரைச்சலை
பட்டாம் பூச்சியைத்
தொலைத்துவிட்டு
நாற்காலிக் கால்களில்
நசுங்கிக் கிடக்கிறது
சோற்றுக்கலையும்
வாழ்க்கை.
=== === ===
கிளிகள்

கூண்டுக் கிளிகள்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?
=== === === === ===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button