இராமநாதபுரம்முதுகுளத்தூர்

அமைச்சருடன் சந்திப்பு

ஏப் 6, இராமநாதபுரம் முதுகுளத்தூரில் சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களை, தனியார் மின் பணியாளர்கள் நலச்சங்கம் பதிவு எண் (139/2022), தனியார் மின் பணியாளர்கள் அறக்கட்டளை, பதிவு எண் (8/2023) சார்பாக அமைச்சர் அவர்களுக்கு தங்களது சங்கத்தின் சார்பாக திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முழு ஆதரவை தெரிவித்து சங்கத்தின் நிர்வாகிகள் ஆகிய மாநில தலைவர் அப்துல் அஜீஸ் (முதுகுளத்தூர்), மாநில பொருளாளர் கதிர்காமன் (சாயல்குடி), மாநில இணைச் செயலாளர் தங்கமாரி( கழுதி), மற்றும் முதுகுளத்தூர் கிளை தலைவர் சம்சுதீன் சேட், ஆகியோர் அமைச்சர் ராஜ கண்ணப்பனை, சந்தித்து பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்தினை தெரிவித்ததோடு, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிக்கு பிறகு கட்டுமான தொழிலாளர்கள் பதிவு தளத்தை எளிதாக்குவதற்காகவும், கட்டுமான தொழிலாளர்களுக்கான உதவி உபகரணங்களை வழங்குவதற்கு வழிவகை செய்வதற்க்காகவும், கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதியத்தை மாதம் 3 ஆயிரம் மாற்றம் செய்வதற்காகவும் கோரிக்கைகள் வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button