இராமநாதபுரம்
மகனை கடத்தியாக போலியாக புகார் கொடுத்த தாய் : போலீஸ் நடவடிக்கை

இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தனது மகன் அஜய்சூர்யா கடத்தப்பட்டதாக சாந்தி என்பவர் அளித்த புகார் மனுவை விசாரணை செய்த காவல்துறையினருக்கு, முதற்கட்ட விசாரணையில் சாந்தி முன்பகை காரணமாக தன் மகனை வெளியூருக்கு அனுப்பிவிட்டு எதிரி கடத்தியதாக பொய் புகார் அளித்தது தெரியவந்தது. இதனைத் தொரடர்ந்து பொய்யான புகார் அளித்த பெண்ணிற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்





