இலவச கண் பரிசோதனை முகாம்

இரண்டாம் நாள்: செப்டம்பர் 27, 2024 (சனிக்கிழமை)
இலவச கண் பரிசோதனை முகாம்
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம் மு.வாகைக்குளம் கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று 27.09.2025 பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ள்ளி நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் வாசன் கண் மருத்துவமனை பரமக்குடி இனைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் சீ.காதர் முகைதீன் அவர்கள் தலைமை வகித்தார், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஷா. ஜஹாங்கீர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். டாக்டர் R.K.பிரகதி மருத்துவர் வாசன் கண் மருத்துவமனை பரமக்குடி அவர்கள், கல்விக் குழு தலைவர் காஜா நஜுமுதீன் அவர்கள், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் காஜா கமருதீன் அவர்கள், பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் அ.பாசில் அமீன் அவர்கள், பள்ளியின் ஆடிட்டர் இக்பால் ஹி.இ.வா சங்கத்தலைவர் அப்துல் அஜீஸ், உடற்கலவி ஆசிரியர் கமால் பாட்சா, ஆசிரியர் கண்ணன், அலுவலக பணியாளர் தாகிர் ஹுசைன், சம்சுதீன் மற்றும் ஜமாத்தார்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் முதுகுளத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் அ.ஷாஜஹான் அவர்கள் கண் சிகிச்சை முகாமினை துவக்கி வைத்தார்கள். இதில் அணைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். மேலும் வாகைக்குளம் கிராம மக்கள், மாணவர்கள் ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள் பத்திரிக்கை நண்பர்கள், பள்ளி நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முக்கியஸ்தர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி நன்றியுரை நவின்றார்கள். இந்நிகழ்ச்சியினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நூருல் அமீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்கள்.







