இராமநாதபுரம்
உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பரமக்குடி நகராட்சி 21,22,23 ஆகிய வார்டு பகுதிகளில் நடைபெற்ற முகாமை பரமக்குடி சட்டமன்றஉறுப்பினர் முருகேசன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் பரமக்குடி வட்டாட்சியர் வரதன், நகர்மன்ற தலைவர் சேதுகருணாநிதி அவர்கள், நகர்மன்றத் துணைத் தலைவர் திரு குணா அவர்கள், வடக்கு நகர செயலாளர் திரு ஜீவரத்தினம் அவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் சர்மிளா அக்பர், பாக்கியம், லண்டன் ரமேஷ், பிரபா சாலமன், கருப்பையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கருப்பையா மற்றும் நகராட்சி துறைசார்ந்த அனைத்து அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.





