இந்தியாஇராமநாதபுரம்முதுகுளத்தூர்

பூடானுக்கு எதிரான லங்காடி போட்டியில் வென்ற இந்தியா –  சாதனை படைத்த முதுகுளத்தூர்  வீரர்

பூடானுக்கு எதிரான லங்காடி போட்டியில் வென்ற இந்தியா –  சாதனை படைத்த முதுகுளத்தூர்  வீரர்

பூடான் நாட்டில் நடந்த முத்தரப்பு லங்காடி போட் டியில் பூடான் அணியை 3:0 என்ற கணக்கில் இந் திய அணி வீழ்த்தியது.


இந்தியா- பூடான் அணிகளுக்கு இடையே மூன்று கட்டமாக லங் காடி போட்டி பூடான் நாட்டில் அக்.,11 முதல் 14 வரை நடந்தது. இந்திய அணியில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரைச் சேர்ந்த தேவசித்தம், மதுரை சரண் இடம் பெற்றனர். மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 12 வீரர்கள் பங்கேற்றனர். இதில் பூடான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றது. முதுகுளத்துார் தேவசித்தம் சிறப்பாக விளையாடி தொடர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாரம்பரிய லங்காடி விளையாட்டை மேம்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி நடைபெறும் தேசிய மாதம் அளவிலான போட்டியை தமிழக அரசு எடுத்து நடத்த வேண்டும். லங்காடி வீரர்களை அங்கீகரித்து அரசு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button