இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் முதல் முறையாக மாநில அளவிலான நடைபெற்ற ஹாக்கி போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் முதல் முறையாக மாநில அளவிலான நடைபெற்ற ஹாக்கி போட்டி

இருமேனி, உச்சிப்புளிஉஜ்ஜைனி ஹாக்கி கிளப் உச்சிப்புளி நடத்திய மாநில அளவிலான 7s ஹாக்கி போட்டி இருமேனி ஜமாஅத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் மாநில அளவில் இருந்து பத்து அணிகள் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசினை திருநெல்வேலி ஹாக்கி விசார்ட்ஸ் அணியினரும் இரண்டாம் பரிசினை இராமநாதபுரம் டவுன் ஹாக்கி கிளப் அணியினரும் மூன்றாம் பரிசினை விருதுநகர் ரெட் ரோஸ் ஹாக்கி கிளப் அணியினரும் பெற்றனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் ஜனாப்.சீனி ஹபிபுல்லா, ஜமாத் தலைவர், இருமேனி அவர்களும், ஜனாப். சரிபு அகமதுகனி, இஸ்லாமிய இளைஞர் அமைப்புத் தலைவர், இருமேனி அவர்களும், குமாரவடிவேல் M.A.,B.Ed., தமிழ்நாடு வாணிபக் கழக மேற்பார்வையாளர் அவர்களும் ஜனாப் மைனா முகம்மது பள்ளி பொறுப்பாளர் தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இருமேனி அவர்களும் கலந்து கொண்டனர்.

தலைமை விருந்தினர்களாக செல்லத்துரை அப்துல்லா, முதுநிலை துணைத் தலைவர். ஹாக்கி இராமநாதபுரம், அவர்களும், இராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா நாகேந்திரசேதுபதி B.Tech.,MBA., அவர்களும், சேதுபதி மாவட்ட செயலாளர், ஹாக்கி இராமநாதபுரம் அவர்களும், M.தினேஷ் குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்,இராமநாதபுரம் அவர்களும் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் முதல் பரிசாக – ரூ.15,000/- த்தை சீனி மாரி தி.மு.க.பிரமுகர், பிள்ளைமடம் அவர்களும், இரண்டாம் பரிசாக – ரூ.10,000/-த்தை‌ இராஜாராம் பாண்டியன் கோபால் MC., மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ், இராமநாதபுரம் மற்றும்
சிவக்குமார் Ex.ஊராட்சி மன்றத் தலைவர், இருமேனி அவர்களும், மூன்றாம் பரிசான – ரூ.5,000/-த்தை கே.டி.ஆர் ஹாக்கி அகடாமி, – செயலாளரும் உடற்கல்வி இயக்குநர், செய்யது அம்மாள் கலைக் கல்லூரி,இராமநாதபுரம் சவேரியர் அவர்களும், மூன்று போட்டிகளுக்கான கோப்பைகளை அன்பளிப்பாக ரமேஷ் உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி. மண்டபம் அவர்களும், சிறந்த விளையாட்டு விரர்களுக்கான கோப்பைகளை அன்பளிப்பாக
முருகபூபதி M.A.,M.BEd.,M.Phil உடற்கல்வி இயக்குநர், அமிர்த வித்யாலயம், CBSE பள்ளி, ரெட்டை வாய்க்கால், திருச்சி அர்ப்பணித்தார்கள்.

இப்போட்டிக்கான ஏற்பாட்டுகளை உஜ்ஜைனி ஹாக்கி கிளப் செயலாளர் சிரஞ்சீவி அவர்களும் ஹாக்கி இராமநாதபுரம் துணைச் செயலாளர் தாமரைக்கண்ணன் செய்திருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button