இராமநாதபுரம்முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் புதிய மின்மாற்றி அமைப்பு – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

முதுகுளத்தூர் புதிய மின்மாற்றி அமைப்பு – பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சி வடக்கர் பகுதியில் புதிய 250 KVA / 11 KV திறன் கொண்ட மின்மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதிணெட்டாம்படியான் இல்லம் அருகில் இந்த புதிய மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்த பிரச்சனைக்கு இதன்மூலம் தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
புதிய மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.

பொதுமக்கள் கருத்து
“இப்பகுதியில் அடிக்கடி மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதாகி வந்தன. இந்த புதிய மின்மாற்றியால் அந்த பிரச்சனை தீரும்” என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மின்வாரிய அதிகாரிகள், புதிய மின்மாற்றி அமைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button