இராமநாதபுரம்

பொங்கல் விழா

கமுதி அருகே பேரையூர்
நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில்
நடைபெற்ற பொங்கல் விழா, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ் நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரிய,
ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து புதிய பானையில் பச்சரிசி, வெல்லம், பால் மற்றும் நெய் கலந்த இனிப்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அறுவடை திருநாளின் முக்கியதுவத்தை உணர்த்துவதோடு கலாச்சார ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்பட்ட இவ்விழாவில், மாணவ,
மாணவியர் உறியடித்தல், கயிறு இழுத்தல், கபடி, கோலப்போட்டி மற்றும் கரும்பு உடைத்தல் என பாரம்பரிய விளையாட்டுகளும் கும்மியாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், மற்றும் தப்பாட்டம் என அனைத்து விதமான நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடத்தினர். இதனை தொடர்ந்து இக்கல்லூரியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவரையும் கல்லூரியின துணை முதல்வர் முனைவர் திருவேணி வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் அகமதுயாசின் தலைமை தாங்கி இதனை
திறந்து வைத்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் ராமர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். கலையரங்கத்திற்கு டாக்டர். அப்துல்கலாம் கலையரங்கம் பெயர் சூட்டினர். உதவி பேராசிரியை ரஞ்சிதம்
விழா ஒருங்கிணைப்பு செய்து நன்றியுரை யாற்றினார்.
படம்
கமுதி அருகே பேரையூர்
நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button