முதுகுளத்தூரில் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா

முதுகுளத்தூரில் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா

அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவிப்பின் படி அதிமுக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி அவர்கள் ஆலோசனைபடி
கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன்
எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையிலும் விவசாய அணி துணைச் செயலாளர் சண்முகபாண்டியன் முன்னிலையில்
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார் ஏற்பாட்டில்
முதுகுளத்தூர் நகர் பொருப்பாளர் குருசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெகுசிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி ஒன்றிய செயலாளர்கள்,முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிளை கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள், BLA-2 உறுப்பினர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.




