இராமநாதபுரம்

கீழக்கரை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

கீழக்கரை பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஏழு நாள் சிறப்பு முகாம் இனிதே துவங்கியது. பள்ளியின் தாளாளர் அனீஸ் அகமது முன்னிலை வகித்தார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் தலைமை தாங்கினார்கள். மேலும் ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகாமில் மாணவர்கள் போதை ஒழிப்பு பேரணி, டெங்கு ஒழிப்பு பேரணி, மரம் நடுதல், வழிபாட்டுத் தலங்களை தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகளில் ஈடுபட இருக்கின்றனர். சிறப்பு முகாம் நிகழ்வுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் ஒருங்கிணைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button