சேரன்மகாதேவியில் விதைப்பந்து விறுவிறு

சேரன்மகா தேவியில் விதைப்பந்து விறுவிறு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஆர்.சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவியரின் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய விதைப்பந்துகள் தயாரிக்கும் பசுமை முன்னெடுப்பு நடைபெற்றது.
எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இருபால் மாணவ மாணவியர் 25,000 விதைப்பந்துகளை உருவாக்கி சாதித்தனர். இரண்டு மணி நேரத்தில் விதைப்பந்துகள் தயாரானது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி கு.சகாயராணி தலைமை தாங்கினார். நிர்வாகி அருட் சகோதரி ஜே.அருள்மொழி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேரை, தி.பார்த்திபன், அம்பை மரகத சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். 1935 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பள்ளியில் 300 மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரிப்பு திட்டத்தின் கீழ் 25,000 விதைப்பந்துகளை தயாரித்தனர். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் பள்ளி குழந்தைகளை உற்சாகமூட்டி விதைப்பந்துகளை செய்ய வைத்தார். விதைப்பந்துகள் செய்ய குழந்தைகள் கொண்டு வந்த விதைகள் போக டிரஸ்ட் நிறுவனம் வேம்பு, புளி, நாவல் விதைகளை குழந்தைகளுக்கு வழங்கி ஊக்குவித்தது. அனைத்து குழந்தைகளுக்கும் சாம்பவர் வடகரை ஹரி பிரியாணி சான்றிதழ் வழங்கியது. தலைமை ஆசிரியை அருட் சகோதரி சகாய ராணிக்கு “எட்டாவது அதிசயம்” என்ற விருதினை திருமாறன் வழங்கி கௌரவித்தார். ஆசிரியர்கள் ரெஜினா, ஞானம்மாள், ஆலன், ராஜஸ்ரீ, ஜீவ ஆனி, அன்னம்மாள், ஆஞ்சலின், மேரி, ஸ்மைலா, ரசிதா, டெய்சி ராணி விதைப்பந்து தயாரிப்பிற்கு உதவினர். சேரன்மகாதேவி பார்த்திபன் நன்றி கூறினார்.




