இராமநாதபுரம்

ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கீழக்கரையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கீழக்கரையில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் கீழ் செயல்படும் ஹமீதியா (ஆண்கள்) மேல்நிலைப்பள்ளியில்
2024-25 கல்வியாண்டில் 10 ,12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கிராத் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, ஹமீதியா ஆண்கள் பள்ளியின் தாளாளர் அனீஸ் அஹமது தலைமையிலும் உஸ்வதுன் ஹஸனா சங்கத்தின் இணை செயலாளர் அஹமது யாசின் முன்னிலையில் நாணயம் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர்
ஜவஹர் பாரூக் வரவேற்புரையாற்றினார், உஸ்வதுன் ஹனா முஸ்லிம் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் முகமது சுலைமான், தைக்கா அப்துல் ஒஃபூர் மற்றும் உறுப்பினர்கள் சங்கத்தின் அலுவலர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், நிகழ்ச்சி ஏற்பாட்டினை
பள்ளியின் ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இந்நிகழ்வின் இறுதியாக ஹமீதியா பள்ளியின் முதுகலை ஆசிரியர் தஸ்தகீர் நன்றியுரை கூறினார்.மேலும் நிகழ்ச்சி தொகுப்பினை பள்ளியின் ஆசிரியர்கள் அப்பாஸ் மந்திரி (பட்டதாரி தமிழ் ஆசிரியர்)முகைதீன் பிச்சை (எ) யராபத் (பட்டதாரி கணித ஆசிரியர்)
மகபூப் பாஷா (பட்டதாரி அறிவியல் ஆசிரியர்) தொகுத்து வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button