இராமநாதபுரம்
நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில், நகர் செயலாளரும் நகர்மன்ற தலைவருமான ஆர்.கே.கார்மேகம் தலைமையில், அண்ணா சிலை முன்பு அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு நகர் திமுக அவைத்தலைவர் சைபுதீன், கவுன்சிலர்கள் பஞ்சவர்ணம், ராமனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




