கீழக்கரையில் ஐ.யு.எம்.எல் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழக்கரையில் ஐ.யு.எம்.எல் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழக்கரை, அக்.3
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி ஏற்பாடு செய்திருந்தனர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “தேசம் காப்போம், தேர்தல் ஆணையத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கங்களை எழுப்பினர். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்து தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் எனவும், ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் என்.நெய்னா முகம்மது தலைமை தாங்கினார்.
இதில் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் துஃபைல், கீழக்கரை நகரத் தலைவர் அஹமது தம்பி கல்வத்தி, நகர் செயலாளர் இலியாஸ், இளைஞர் அணி நகர் துணைச் செயலாளர் அசன்,
நகர் துணை செயலாளர் பெவுசல் அமீன், ரஹ்மத்துல்லா, நகர் கொள்கை பரப்புச் செயலாளர் லெப்பை தம்பி, வர்த்தக அணி நகரத் தலைவர் சேகு ஜலாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில், கீழக்கரை நகர் தலைவர் ஹிதாயத்துல்லா உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



