இராமநாதபுரம்

ராமநாதபுரம் : ஆண்கள் மட்டும் பங்குபெறும் கோவில் திருவிழா

ஆண்கள் மட்டும் பங்குபெறும் கோவில் திருவிழா

ராமநாதபுரம்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் அமைந்துள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் விநோதமான பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தத் திருவிழா மற்றும் வழிபாட்டில் பெண்கள் யாரும் பங்கேற்பதில்லை; முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வது இதன் தனி சிறப்பாகும்.


இந்த ஆண்டிற்கான விழாவையொட்டி, கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக 38 ஆட்டுக்கிடாக்கள் பலியிடப்பட்டன. தொடர்ந்து, திறந்தவெளியில் பிரம்மாண்ட அண்டாக்களில் சுடச்சுட சாதம் வடிக்கப்பட்டு, அதனை பெரிய உருண்டைகளாகப் பிடித்து பலியிடப்பட்ட கறிக்குழம்புடன் எல்லைப்பிடாரி அம்மனுக்கு சிறப்புப் படையலிடப்பட்டது. தீபாராதனை மற்றும் வழிபாடுகள் முடிந்த பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு இலைகளில் ஆவி பறக்கும் கமகமக்கும் கறிவிருந்து பரிமாறப்பட்டது.


கிராமத்தின் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கறிவிருந்துதிருவிழா,சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் சொழிக்கவேண்டும் என வேண்டிக்கொண்டனர்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button