இராமநாதபுரம்
கஞ்சா விற்பனைக்கு எதிராக நடவடிக்கை – 1.2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கஞ்சா விற்பனைக்கு எதிராக நடவடிக்கை – 1.2 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இருமேனி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த ராஜா என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜா மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்பனைக்கு எதிராக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.




