பாவை பவுண்டேஷன் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குமருத்துவ உபகரணம் வழங்கல்

பாவை பவுண்டேஷன் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
மருத்துவ உபகரணம் வழங்கல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டாரம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பாவை பவுண்டேஷன் சார்பில் மருத்துவப் பயன்பாட்டிற்குத் தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு தொடர்ந்து அரசு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் பாவை பவுண்டேஷன் சார்பில் தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு மருத்துவ அலுவலர்கள் டாக்டர் அனுசோபா மற்றும் டாக்டர் நாக் மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், SHN, VHN, MLHP, மருந்தாளுநர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்வின் ஒருங்கிணைப்புப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் வழிநடத்தினார்.
கிராமப்புற மக்களுக்கு அரசு மருத்துவ சேவைகள் தொடர்ந்து சிறப்பாகக் கிடைக்கவும், மருத்துவப் பணிகள் மேலும் மேம்படவும் உதவும் வகையில் மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாவை பவுண்டேஷன் அமைப்பிற்கு, சுகாதார நிலைய மருந்தாளுநர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.





