இராமநாதபுரம்

ஆய்வு

இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள தனிப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்ற பிரிவுகள், Finger Print Cell, MFSL மற்றும் மாவட்ட ஆயுதப்படை உள்ளிட்ட பிரிவுகளுக்கு தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா,இ.கா.ப. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, ஒவ்வொரு பிரிவின் செயல்பாடுகளையும் விரிவாக ஆராய்ந்து, காவல் பணியின் திறன் மற்றும் செயல்திறனை உயர்த்துவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களையும் தேவையான அறிவுறுத்தல்களையும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்,இ.கா.ப. உடனிருந்து ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து தகுந்த விளக்கங்களையும் வழங்கினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button