கீழக்கரை ஹோட்டல், பேக்கரி பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

கீழக்கரை ஹோட்டல், பேக்கரி பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாரத்தில் செயல்படும் ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு அடிப்படை பயிற்சி முகாம் நடைபெற்றது.உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடந்த இம்முகாமில் சுரேஷ் கண்ணன் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். சுகாதாரமான உணவு தயாரிப்பு, உணவு கையாளும் முறைகள், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தகுதி பெற்ற கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் கீழக்கரை ஹோட்டல் சங்கத்தின்
தலைவர் துரை ஜெயமுருகன்,
துணை தலைவர் சண்முகானந்தம், செயலாளர் கரீம்,துணை செயலாளர் அப்துல் வாஹித்,பொருளாளர் முஜுபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள், ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
உணவு வணிக நிறுவனங்களில் விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.




