இராமநாதபுரம்
சட்டவிரோத கஞ்சா விற்பனைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

சட்டவிரோத கஞ்சா விற்பனைக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குணால் மற்றும் மதீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குற்றத்தை தடுக்க புகார் எண்: 8122067100



