இராமநாதபுரம்

கடலாடி வடமாடு மஞ்சுவிரட்டு கோலாகலம்

கடலாடி வடமாடு மஞ்சுவிரட்டு கோலாகலம்

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் இறையநேந்தல்-சேர்ந்தை கிராமத்தில் கோயில் மேலவீட்டு வகையறா சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் துணிச்சலுடன் அடக்க முயன்றனர்.

வெற்றிகரமாக காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கப் பரிசுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.

போட்டிக்கான பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக கடலாடி போலீசார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button