இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது முகம்மதியா மேல்நிலைப்பள்ளி

ராமநாதபுரம் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது முகம்மதியா மேல்நிலைப்பள்ளி

ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சித்தார் கோட்டை முகம்மதியா மேல்நிலைப்பள்ளி அணிகள் அபார வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.

பள்ளியின் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர்.வாலிபால் 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் முதலிடம்,பீச் வாலிபால்14, 17, 19 வயதுப் பிரிவுகளில் முதலிடம்,கால்பந்து 14 வயதுப் பிரிவில் முதலிடம்,பால் பேட்மிட்டன்19 வயதுப் பிரிவில் முதலிடம்,கூடைப்பந்து 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் இரண்டாம் இடம்

மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

பள்ளித் தலைவர் முகம்மது ஷாஜகான், தாளர் காஜா மெய்னுதீன், பள்ளி உதவித் தலைவர் சுல்தான், செயலாளர் அபுதாஹீர், ஜமாத் தலைவர் சையது அகமது கபீர், செயலாளர் சாகுல் ஹமீது, உதவி செயலாளர் ரைசுதீன், ஒருங்கிணைப்பாளர் ரிபாய் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதனுடன் தலைமை ஆசிரியர் சுரேஷ் பாபு, உதவி தலைமை ஆசிரியர்கள் முகமது சுகைப், அஜிஸ் கனி மற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மாணவர்களின் கடின உழைப்பை பாராட்டி, மாவட்ட போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button