இராமநாதபுரம்
கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் நெல் பயிரில் களை மேலாண்மை, உர மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் தமிழ் விளக்கினார். உதவி வேளாண்மை அலுவலர் கார்த்தி மானிய திட்டங்கள் குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமொழி அட்மா திட்டம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர். பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்தும்
எடுத்துரைக்கப்பட்டது.





