இராமநாதபுரம்

மரக்கன்று நடப்பட்டது

சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் ஐஎன்ஏ சரஸ்வதி மகளிர் பூங்காவில், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தர மூர்த்தி தலைமையில், முகமது சதக் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளர், உதவி பேராசிரியர் ஆர்த்தி முன்னிலையில் முகமது சதக் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் பூங்காவில் ஆலம், மகாகனி, வேம்பு, சரக்கொன்றை, கொய்யா போன்ற மரக்கன்றுகள் நடவு செய்தும் தூய்மை பணியும் புரிந்தனர். மாணவியர்களுக்கு விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் ,காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இந்நிகழ்வை ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button