இராமநாதபுரம்

மனிதம் ஜிஓபி அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை மற்றும் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன…

மனிதம் ஜிஓபி அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை மற்றும் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு விழா – நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன…

சாயல்குடி மனிதம் ஜிஓபி அறக்கட்டளை சார்பில் உலக புகையிலை மற்றும் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (31.05.2026) காலை 10.00 மணியளவில் சாயல்குடி பேருந்து நிலைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சாயல்குடி காவல் ஆய்வாளர் அன்னராஜ் அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டார். அவர் தனது உரையில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் தீமைகள், அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள், குடும்பங்களில் உருவாகும் சிக்கல்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கு மனிதம் ஜிஓபி அறக்கட்டளையின் நிறுவனர் அ. முகமது முசாபர்கனி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து ஆர்.டி.ஐ. ஆர்வலர் இருவேலி ஜாஹிர் உசேன் அவர்கள் நோக்க உரையாற்றி, போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவதில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் T.M. குலாம் முகைதீன், பெருவணிகர் சங்க தலைவர் P.P.M. விஷ்ணுகாந்த், இஷா பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஷா. பஷீர், இந்தியன் ஆயில் மற்றும் ரெஸ்டாரண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த A.S.A. அஜாருதீன், ஜேசு ஷோபா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் நீரா. பொன்முத்து (கௌரவ விரிவுரையாளர், கடலாடி அரசு கலைக் கல்லூரி), அதிமுக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் V.V.S. சேதுபதி, நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த T. தியாகராஜன், பெருவணிகர் சங்க பொருளாளர் ரியாஸ்கான், தவெக சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி மற்றும் தவெக நகர் இணைச் செயலாளர் சுயம்புலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக சமூக செயற்பாட்டாளர் க. பாஸ்கரன் செயல்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுடன், போதை மற்றும் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.
இறுதியாக ஜோஸ்பின் ஜெனிகா அவர்கள் நன்றியுரை வழங்கியதுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button